Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பீதியை அதிகரிக்க பயங்கரவாதிகள் பயன்படுத்திய கொடூர உத்தி

மென்செஸ்ட்டரில் நேற்று ( 23 மே 2017) நடந்த குண்டுவெடிப்பில் மாண்ட பலர், சிறுமிகளும் இளம் பெண்களும்...

வாசிப்புநேரம் -
பீதியை அதிகரிக்க பயங்கரவாதிகள் பயன்படுத்திய கொடூர உத்தி

தமது அக்காவையும் 11 வயது அக்கா மகளையும் காப்பாற்ற முயன்றபோது மாண்ட 32 வயது கெலி ஃப்ரூஸ்டர்.

லண்டன் : மென்செஸ்ட்டரில் நேற்று ( 23 மே 2017) நடந்த குண்டுவெடிப்பில் மாண்ட பலர், சிறுமிகளும் இளம் பெண்களும்...

ரஷ்யாவில் நடந்த பெஸ்லான் பள்ளி முற்றுகை, பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவப் பள்ளிப் படுகொலை, நைஜீரியாவில் மாணவிகள் கடத்தல் ஆகிய சம்பவங்களுக்கு நிகரான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது மென்செஸ்ட்டர் தாக்குதல்.

பிரபல 'பாப்' பாடகி அரியானா க்ரென்டெயின் இசை நிகழ்ச்சியில் நடந்த அந்த வெடிப்பில் 22 பேர் மாண்டனர்; 59 பேர் காயமடைந்தனர்.

பிள்ளைகளைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் பயங்கரவாதிகள் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தத் திட்டமிட்டது தெரிவதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

மாண்டவர்களில் ஒருவர் 32 வயது கெலி ஃப்ரூஸ்டர்.

வெடிப்பின்போது, தமது அக்காவையும் 11 வயது அக்கா மகளையும் காப்பாற்ற முயன்றபோது கெலி மாண்டார்.
கெலி, தங்கமான இதயம் கொண்ட புத்திசாலிப் பெண் என்று அவரது நண்பர் ஒருவர் வருணித்தார்.

இளையர்களைக் கொல்ல வேண்டும் என்ற தீய நோக்கத்துடனேயே இசை நிகழ்ச்சியை பயங்கரவாதிகள் குறிவைத்தாகப் பயங்கரவாத எதிர்ப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்