Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

விமானங்களைத் தகர்க்க கழுகுகளைப் பயன்படுத்தும் பிரான்ஸ்

ஆளில்லா விமானங்கள் மூலம் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க பிரான்ஸ் கழுகுகளை ஈடுபடுத்தி வருகிறது.

வாசிப்புநேரம் -

ஆளில்லா விமானங்கள் மூலம் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க பிரான்ஸ் கழுகுகளை ஈடுபடுத்தி வருகிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தீவிரவாதிகள் கையாளும் முறைகள் வித்தியாசமாக உள்ளது.

அதனால், பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் நோக்கில் உருவாக்கப்படும் ஆளில்லா விமானங்களைச் சுடுவது ஆபத்தாக முடிகிறது.

அதைத் தவிர்க்க பிரான்ஸ் விமானப் படையினர் 4 கழுகுகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர். 

பயங்கரவாதிகளின் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் கழுகுகளின் கால்களில் கட்டப்படுகின்றன. 

20 நொடிகளில் 200 மீட்டர் தூரம் பறக்கும் வல்லமையைக் கொண்ட கழுகுகள் அந்த விமானங்கள் மீது வேகமாக மோதி அதை புற்தரையில் விழ வைக்கின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்