Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சுமார் 2,500 கள்ளக் குடியேறிகளை மீட்டுள்ள இத்தாலி

இத்தாலி, கடந்த மூன்று நாட்களில், படகுகளில் வந்த சுமார் 2,500 கள்ளக் குடியேறிகளை மீட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இத்தாலி, கடந்த மூன்று நாட்களில், படகுகளில் வந்த சுமார் 2,500 கள்ளக் குடியேறிகளை மீட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவிலான கள்ளக் குடியேறிகள் கடல் வழி இத்தாலிக்குள் நுழைய முயற்சி செய்ததாகக் கடற்துறை பாதுகாவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

9 படகுகளில் இருந்த சுமார் 1,100 பேர் நேற்று லிப்ய கரைக்கு அப்பால் மீட்கப்பட்டனர்.

அவர்கள் வந்த படகுகளின் நிலை மோசமாக இருந்தது என்றும் கூறப்பட்டது. 

ஆண்டு தொடக்கத்திலிருந்து பத்தாயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் கடல்-வழி இத்தாலிக்குள் நுழைந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. 

கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையைவிட அது மும்மடங்கு அதிகம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்