Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்கத் திட்டம்: டிரம்ப்

அமெரிக்காவில் மீண்டும் மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்கத் திட்டமிருப்பதாக அதிபர் டோனல்டு டிரம்ப் உறுதிதெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் மீண்டும் மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்கத் திட்டமிருப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதிதெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பெரியளவு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை நேற்று அவர் சந்தித்தார்.

எனினும், தொழிற்சங்கங்களில் பல ஆண்டுகளாகக் குறைந்துவரும் வேலை விகிதத்தை அதிகரிப்பது குறித்த மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

1994-ஆம் ஆண்டில் வட அமெரிக்காவுடன் செய்யப்பட்ட தடையற்ற வர்த்தக உடன்பாட்டின் வழி உற்பத்தி வேலைகளில் மூன்றில் ஒரு பங்கினை அமெரிக்கா இழந்திருப்பதாகச் சொன்னார் திரு டிரம்ப்.

சுமார் 16 ஆண்டுக்கு முன்னர், சீனா, உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்ததில் சுமார் எழுபதாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதையும் அவர் சுட்டினார்.

அமெரிக்காவின் அதிபராகத் திரு டிரம்ப் பதவியேற்று ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க நிறுவனங்கள் சில, அமெரிக்கர்களை மட்டுமே வேலைக்கு எடுக்க வேண்டும் என்று திரு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் இதுவரை, பெரியளவு பொருளியல் விவகாரங்களைக் கையாள்வதற்கான சட்டரீதியான வழிமுறைகள் குறித்து இன்னமும் பொதுமக்களுக்குத் தகவல் அளிக்கப்படவில்லை.

வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், கட்டமைத் திட்டம் உட்பட சில விவகாரங்களையொட்டி திரு டிரம்ப், பிரசாரம் செய்திருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்