Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

64 ஆண்டுகள் கழித்து காட்டை விட்டு வெளியே வந்த பாம்பு

பிரேசில் காடுகளிலிருந்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
64 ஆண்டுகள் கழித்து காட்டை விட்டு வெளியே வந்த பாம்பு

(படம்: Lívia Corrêa/Instituto Butantan)

பிரேசில் காடுகளிலிருந்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை Elusive boa பாம்பு.

அந்தப் பாம்புகள் பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கும் படாமல் உயிர்வாழ்த்து வந்தன.

பிரேசில் நாட்டின் ரிபெய்ரா பகுதியை சேர்ந்த மக்கள் அந்தப் பாம்பைப் பிடித்து உள்ளூர் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

பிடிப்பட்ட பாம்பு ஒரு பெண் இனம். 

முன்னதாக 1953 ஆம் ஆண்டு அந்த வகை பாம்புகள் கண்களுக்கு தென் பட்டது. 

இத்தனை ஆண்டுகள் அந்த பாம்புகள் மனிதர்கள் கண்களுக்கு புலப்படாமலேயே இருந்து வந்தன.

பிடிக்கப்பட்ட அந்த பாம்பு மீண்டும் காடுகளில் விடப்பட்டுள்ளது. 

அந்த பாம்பின் உடலில் ரேடியோ அலைஅனுப்பி பொருத்தப்பட்டுள்ளது. 

அதன் மூலம் காடுகளில் அந்த பாம்பு எப்படி வசிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்க உள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்