Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உலகில் அமைதிக்கான உந்துசக்தி சீனா?

சீனா, உலகில் அமைதியையும் நிலைத்தன்மையும் கொண்டு வர உந்துசக்தியாத் தொடந்து திகழும் என்று அந்நாட்டின் துணை அதிபர் ஸாங் காவ் லீ (Zhang Gaoli )தெரிவித்துள்ளார்

வாசிப்புநேரம் -

சீனா, உலகில் அமைதியையும் நிலைத்தன்மையும் கொண்டு வர உந்துசக்தியாத் தொடந்து திகழும் என்று அந்நாட்டின் துணை அதிபர் ஸாங் காவ் லீ (Zhang Gaoli )தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் நடைபெற்ற Buoao கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அவர் அந்தக் கருத்தை முன் வைத்தார். மேலும், அமைதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்புணர்ச்சியை பெரிய நாடுகள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். வர் தம்முடைய உரையில், நாடுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிப் பேசினார். ஆனால், அவர் எந்தப் பிரச்சினையையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.

இருப்பினும், அவர் வட கொரியாவைக் குறிப்பிடும் வகையில் பேசியிருக்கலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துரைத்தனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல், வட கொரியா பல அணுவாயுதப் பரிசோதனைகளை நடத்தி வருகின்றது. அதன் தொடர்பில், அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், சீனா வட கொரியாவின் அணுவாயுதத் திட்டங்களை நிறுத்தவேண்டி, சீனா மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியது.அதற்கு பதிலளித்த சீனா, கொரிய தீபகற்பத்தின் பிரச்சினைளுக்கு, இரு தரப்பு சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் மட்டுமே தீர்வாக இருக்கமுடியும் என்று முன்னதாகக் கூறியிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்