Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உலகெங்கும் "பூமி நேரம் "

உலக வெப்பமயம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகெங்கும் பூமி நேரம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, சிங்கப்பூர் உள்ளிட்ட சுமார் 170 நாடுகளில், மில்லியன் கணக்கான மக்கள் நேற்றிரவு விளக்குகளின் ஒளிஅளவைக் குறைத்தனர்.

வாசிப்புநேரம் -
உலகெங்கும் "பூமி நேரம் "

பூமி.

உலக வெப்பமயம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகெங்கும் பூமி நேரம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, சிங்கப்பூர் உள்ளிட்ட சுமார் 170 நாடுகளில், மில்லியன் கணக்கான மக்கள் நேற்றிரவு விளக்குகளின் ஒளிஅளவைக் குறைத்தனர்.
சிங்கப்பூரின் முக்கியக் கட்டடங்கள் பலவற்றின் விளக்குகள் அணைக்கப்பட்டன. பூமி நேரத்தை ஒட்டி நடைபெற்ற ஓட்டத்தில், சுமார் 35,000 பேர் பங்கேற்றனர்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 2007ஆம் ஆண்டு தொடங்கியது பூமி நேரம்.
உலக வனவிலங்கு, இயற்கை நிதியம் அதனை நடத்தி வருகிறது. அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக பூமியில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களின் கவனத்தைக் கவருவது நோக்கம்.
சிட்னியில் தொடங்கிய அந்த முயற்சி, இப்போது உலகெங்கும் பரவியுள்ளது. சிட்னி துறைமுகத்தின் ஓரமாக உள்ள புகழ்பெற்ற கட்டடங்கள் பலவும் அவசியமற்ற விளக்குகளை அணைத்து வைத்தன.
உள்ளூர் நேரப்படி உலகிலுள்ள பல்வேறு நகரங்களில், இரவு எட்டரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு, விளக்குகள் அணைக்கப்படும் அல்லது அவற்றின் ஒளிஅளவு குறைக்கப்படும்.
உலகின் பல்வேறு நகரங்களில், நிலக்கரியை எரித்தே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துவதன் மூலம், நிலக்கரியால் உண்டாகும் சுற்றுச் சூழல் சீர்கேடுகளைக் குறைக்க முடியுமென்று, பூமி நேர ஏற்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்