Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பங்களாதேஷ்: சர்ச்சைக்குரிய 'தர்ம தேவதை'ச் சிலை அகற்றப்பட்டது

பங்களாதேஷின் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்த தர்ம தேவதைச் சிலை தொடர்பான சர்ச்சையையடுத்து, அதனை அங்கிருந்து அகற்ற முடிவெடுக்கப்பட்டது

வாசிப்புநேரம் -
பங்களாதேஷ்: சர்ச்சைக்குரிய 'தர்ம தேவதை'ச் சிலை அகற்றப்பட்டது

பங்களாதேஷில் சிலைக்கு எதிராக முழக்கமிடும் ஆர்ப்பாட்டக்காரர்கள். (படம்: ஏ. எஃப். பி.)

பங்களாதேஷின் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்த தர்ம தேவதைச் சிலை தொடர்பான சர்ச்சையையடுத்து, அதனை அங்கிருந்து அகற்ற முடிவெடுக்கப்பட்டது. அந்தச் சிலை, சுமார் 6 ஆறு மாதங்களுக்கு முன்னர் எழுப்பப்பட்டது.

சிலையை வடித்த மிரிணால் ஹேக்கின் முன்னிலையில் அது அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

சிலையை அகற்றும் முடிவு, முற்போக்குக் கொண்ட பங்களாதேஷ் மக்களுக்கு விழுந்த அடி என்று திரு ஹேக் கூறினார். சமயச் சார்பற்றக் கொள்கையைச் சார்ந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்த நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பங்களாதேஷில் தர்ம தேவதையின் சிலை, கடந்த சில மாதங்களாகச் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிரேக்கப் பெண் தெய்வத்தின் சிலை அது என்றும் அத்தகைய சிலை பங்களாதேஷுக்குப் பொருந்தாது என்றும் கூறி தீவிரப் போக்குடையவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சிலையை அகற்றிவிட்டு, அந்த இடத்தில், இஸ்லாத்தின் புனிதப் புத்தகமான குர்ஆன் வைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

சமயச் சார்பற்ற அவாமி லீக்கைச் சேர்ந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹஸீனாவும் சிலைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தார். அந்தச் சிலை தமக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தலில், கிராமப்புறங்களில் வாழும் பழைமைவாதிகளின் வாக்குகளைப் பெறத் திருவாட்டி ஹசீனா அவ்வாறு செய்வதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்