Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக வரி மோசடி வழக்குத் தொடுக்க யோசனை

பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக வரி மோசடி வழக்கைப் பதிவு செய்வது குறித்து ஸ்பானிய வழக்குரைஞர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக வரி மோசடி வழக்குத் தொடுக்க யோசனை

படம்: AP

பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக வரி மோசடி வழக்கைப் பதிவு செய்வது குறித்து ஸ்பானிய வழக்குரைஞர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

ரொனால்டோ 2011ஆம் ஆண்டுக்கும் 2014க்கும் இடையிலான காலகட்டத்தில் 15 மில்லியன் யூரோ மோசடி செய்ததாக வரித் துறை கூறுகிறது.அதன் தொடர்பில் வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க அடுத்த மாதம் வரை நேரமிருப்பதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரொனால்டோவுக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு, வரி மோசடி வழக்கில் லயனல் மெஸ்ஸி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்