Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

டிரம்ப்பின் மருமகன் மீது அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

ரஷ்யாவுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் திரு. ஜெரட் குஷ்னர் மீது, மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
டிரம்ப்பின் மருமகன் மீது அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

அதிபர் டிரம்ப்புடன் அவரது மருமகன் ஜெரட் குஷ்னர். (படம்: ராய்ட்டர்ஸ்)

ரஷ்யாவுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் திரு. ஜெரட் குஷ்னர் மீது, மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது. வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான திரு. குஷ்னர் மீது விசாரணை நடத்தப்படுவதாக, அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரஷ்யத் தூதர், ரஷ்ய வங்கியாளர் போன்றவர்களுடன் திரு குஷ்னர் நடத்திய கலந்துரையாடல்களின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது.

சென்ற ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு. டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வெல்வதற்கு உதவ ரஷ்யா தலையிட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.அதன் தொடர்பில் விசாரணை நடந்துவருகிறது.

விசாரணைக்குத் திரு. குஷ்னர் ஒத்துழைப்பார் என அவரது வழக்குரைஞர் கூறியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்