Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நேட்டோவின் தற்காப்புச் செலவைக் குறைகூறும் டிரம்ப்

நேட்டோ உறுப்பு நாடுகள், தற்காப்புக்கான செலவை அதிகரிக்காதது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறைகூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
நேட்டோவின் தற்காப்புச் செலவைக் குறைகூறும் டிரம்ப்

(படம்: AFP)

நேட்டோ உறுப்பு நாடுகள், தற்காப்புக்கான செலவை அதிகரிக்காதது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறைகூறியிருக்கிறார்.

கிளர்ச்சி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த, அந்தக் கூட்டணி கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், அண்மையில் மென்செஸ்ட்டர் நகரில் நடந்த தாக்குதல்களைப் போல், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

பிரஸ்ஸல்ஸில், நேட்டோ அமைப்பின் புதிய தலைமையகத்தில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் திரு டிரம்ப் உரையாற்றினார்.

நேட்டோ உறுப்பு நாடுகள், அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறைந்தது 2 விழுக்காட்டைத், தற்காப்புக்கு ஒதுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்