Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அள்ளு அள்ளு... தள்ளு தள்ளு!

நேட்டோவில் அமெரிக்காவின் சுமையைக் குறைக்க  மற்ற உறுப்பு நாடுகள் தங்களின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வசூலை அள்ளத் திரு. டிரம்ப் முயன்று வருகிறார்.

வாசிப்புநேரம் -
அள்ளு அள்ளு... தள்ளு தள்ளு!

மற்றொரு நாட்டுத் தலைவர் ஒருவரைத் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வரும் டிரம்ப். (படம்: ஏ.எஃப்.பி)

நேட்டோவில் அமெரிக்காவின் சுமையைக் குறைக்க மற்ற உறுப்பு நாடுகள் தங்களின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வசூலை அள்ளத் திரு. டிரம்ப் முயன்று வருகிறார்.

அதே வேளையில், மொண்டிநெக்ரோ பிரதமர் டக்கோ மார்க்கோவிச்சைப் புறந்தள்ளி, தமது உடையைத் திரு. டிரம்ப் சரிசெய்துகொள்கிறார்.
இன்று ( 26 மே 2017) பிரசல்ஸில் நடைபெற்ற நேட்டோ உச்சநிலைக் கூட்டத்தில் அச்சம்பவம் நடந்தது.

சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் விரைவில் பரவியது. அந்தக் காணொளியைத் தாம் பார்க்கவில்லை என்றும் திரு. டிரம்ப், தாம் இருக்க வேண்டிய இடத்திற்குச் செல்ல அவ்வாறு செய்திருக்கலாம் என்றும் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் சோன் ஸ்பைசர் கூறினார்.

திரு டிரம்ப்பின் செய்கைகளைக் கண்டு சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் திணறும் அமெரிக்கர்கள் பலர் தங்கள் ஆதங்கத்தைச் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர் .

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்