Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நேட்டோ உறுப்பு நாடுகள், தற்காப்புக்கான செலவை அதிகரிக்காதது குறித்து டிரம்ப் காட்டம்

நேட்டோ உறுப்பு நாடுகள், தற்காப்புக்கான செலவை அதிகரிக்காதது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்  குறைகூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

நேட்டோ உறுப்பு நாடுகள், தற்காப்புக்கான செலவை அதிகரிக்காதது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறைகூறியிருக்கிறார்.

கிளர்ச்சி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த, அந்தக் கூட்டணி கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும்; இல்லாவிடில் அண்மையில் பிரிட்டனின் மென்செஸ்ட்டர் பிரிட்டனின் மென்செஸ்ட்டர் நகரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலைப் போல், மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

தமது முதல் அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணத்தின் ஓர் அங்கமாகத் திரு. டிரம்ப் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் பேசினார். அங்கு அமைந்துள்ள நேட்டோ அமைப்பின் புதிய தலைமையகத்தில், நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

நேட்டோ உறுப்பு நாடுகள், அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறைந்தது 2 விழுக்காட்டைத் தற்காப்புக்கு ஒதுக்கவேண்டும் என்றார் திரு. டிரம்ப். அது, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்ட ஒன்று; ஆனால் 28 உறுப்பு நாடுகளில் 5 மட்டுமே அதைச் செயல்படுத்திவருவதாக அவர் சுட்டினார்.

தனது தேர்தல் பிரசாரத்தின்போது திரு. டிரம்ப் நேட்டோவைப் பயனற்ற அமைப்பு என்று கூறியிருந்தார்.அதைத் தொடர்ந்து அமெரிக்கா நேட்டோவுக்கு வழங்கும் ஆதரவைக் குறைத்துக்கொள்ளக்கூடும்; அது, இராணுவப் பாதுகாப்பிற்காக நேட்டோவைப் பெரிதும் நம்பியிருக்கும் ஐரோப்பாவைப் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.நேட்டோ, தற்போது ஐ எஸ் அமைப்பைத் தோற்கடிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள குழுவுடன் சேர்ந்துகொண்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்