Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கக் சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தை மாற்ற முடியவில்லை

அமெரிக்கத் துணை அதிபர், மைக் பென்ஸ், சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தை மாற்றுயமைக்கவிருந்த குடியரசுக் கட்சித் திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் தடுத்துள்ளது எனக் குறைகூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
அமெரிக்கக் சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தை மாற்ற முடியவில்லை

படம்: Reuters

அமெரிக்கத் துணை அதிபர், மைக் பென்ஸ், சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தை மாற்றுயமைக்கவிருந்த குடியரசுக் கட்சித் திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் தடுத்துள்ளது எனக் குறைகூறியுள்ளார்.

எனினும், அடுத்தக் கட்ட சட்டத் திட்டங்களை நிறைவேற்றுவதன் நோக்கில், வெள்ளை மாளிகை, மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டிய தேவையிருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

வெஸ்ட் வெர்ஜீனியா மாநிலத்தின் சாலார்ஸ்டன் நகரில் திரு பென்ஸ், சிறிய வர்த்தக உரிமையாளர்களிடம் பேசியபோது அந்தக் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அமெரிக்க அதிபர், வரி விதிகளை எளிமையாக்குவதிலும், வரி விகிதத்தைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த தயாராகிவிட்டதாகச் சொன்னார் திரு பென்ஸ். சிறிய நிறுவனங்கள், பண்ணைகளை நடத்தும் குடும்பங்கள் போன்றவற்றுக்கு வரிநீக்கம் செய்யவிருப்பதாக அவர் சொன்னார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்