Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அல்கயிடா அமைப்பின் தலைவர் ஒருவர் பலி

ஆஃப்கானிஸ்தானில் இந்த வாரம், அமெரிக்க நடத்திய ஆகாயத் தாக்குதலில் அல்கயிடா அமைப்பின் தலைவர் ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அல்கயிடா அமைப்பின் தலைவர் ஒருவர் பலி

படம்: REUTERS/Nikola Solic

ஆஃப்கானிஸ்தானில் இந்த வாரம், அமெரிக்க நடத்திய ஆகாயத் தாக்குதலில் அல்கயிடா அமைப்பின் தலைவர் ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இருவரின் மரணத்துக்குக் காரணமான பயங்கரவாதத் தலைவர் கோரி யாசின், கடந்த 19ஆம் தேதி நடந்த ஆகாயத் தாக்குதலில் மாண்டதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியது.

2009ஆம் ஆண்டு, இலங்கை கிரிக்கெட் குழு இருந்த பேருந்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் கோரி காரணமென நம்பப்படுகிறது.

இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் விதத்திலும், அப்பாவி மக்களை குறிவைக்கும் வண்ணமும் நடந்துகொள்ளும் பயங்கரவாதிகள், நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பதற்குக் கோரியின் மரணம் ஒரு சான்று எனக் கூறினார் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜிம் மெட்டிஸ்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்