Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தனிப்பட்டு செயல்பட்டாரா? - லண்டன் தாக்குதல்

லண்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த தாக்குதலை நடத்திய நபர் தனிப்பட்டு செயல்பட்டதாய் நம்புவதாகப் பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புப் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
தனிப்பட்டு செயல்பட்டாரா? - லண்டன் தாக்குதல்

காலிட் மாஸூட். படம்: REUTERS

லண்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த தாக்குதலை நடத்திய நபர் தனிப்பட்டு செயல்பட்டதாய் நம்புவதாகப் பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து கண்டுபிடிக்க முடியாமல் போகும் சாத்தியமும் இருப்பதாகக் கூறப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த 52 வயது காலிட் மாஸூட், கடந்த புதன்கிழமை, நாடாளுமன்றத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழையும் முயற்சியில் ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்றதோடு, வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் இருந்தோரின்மீது காரையும் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

இருப்பினும், மாஸூட் உதவியாளர்களுடன் அந்தத் தாக்குதலை நடத்தினாரா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்துக்குப் பிறகு,  இங்கிலாந்தின் சில பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

11 பேர் முதலில் கைதுசெய்யப்பட்டனர். இப்போது ஒருவர் மட்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர். 

மாஸூட் குறித்த தகவல் அறிந்தோர், போலீசாரின் விசாரணைக்கு உதவ முன்வரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்