Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதுப்பிக்கப்பட்ட கேலக்சி நோட் 7 திறன்பேசிகள் அடுத்த வாரம் விற்பனையில்

உலகின் மிகப் பெரிய திறன்பேசி உற்பத்தியாளரான சாம்சுங், புதுப்பிக்கப்பட்ட கேலக்சி நோட் 7 திறன்பேசிகளை அடுத்த வாரத்திலிருந்து விற்கவுள்ளது. 

வாசிப்புநேரம் -
புதுப்பிக்கப்பட்ட கேலக்சி நோட் 7 திறன்பேசிகள் அடுத்த வாரம் விற்பனையில்

படம்: George Frey/Getty Images/AFP

உலகின் மிகப் பெரிய திறன்பேசி உற்பத்தியாளரான சாம்சுங், புதுப்பிக்கப்பட்ட கேலக்சி நோட் 7 திறன்பேசிகளை அடுத்த வாரத்திலிருந்து விற்கவுள்ளது.

வெடிக்கும் மின்கலன் தொடர்பான பிரச்சினையால் சாம்சுங் நிறுவனம் 3 மில்லியன் கேலக்சி நோட் 7 திறன்பேசிகளை மீட்டுக் கொண்டது. இதனால் பல பில்லியன் டாலர் நட்டம் ஏற்பட்டதோடு சாம்சுங் நிறுவனத்தின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட திறன்பேசிகளை அப்புறப்படுத்தினால் சுற்றுப்புறத்திற்குத் தீங்கு ஏற்படக்கூடும் என Greenpeace அக்கறை தெரிவித்திருந்தது. புதுப்பிக்கப்பட்ட திறன்பேசிகளில் புதிய மின்கலனும் மேம்படுத்தப்பட்ட மென்பொருளும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் தேதியிலிருந்து, பொதுமக்கள் இந்தத் திறன்பேசியை 616 டாலருக்கு வாங்கிக் கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்