Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

காற்று வாங்கப் போய் கரடியால் தாக்கப்பட்டவர்

வசந்த கால வெளிப்புறத்தில் வேட்டைக்குப் புறப்பட்ட கனடிய ஆடவர், வனப்பகுதியில் உல்லாசமாய்ச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார். அப்போது சற்று தூரத்தில் கரடி ஒன்று வந்ததைக் கண்டார்.

வாசிப்புநேரம் -

வசந்த கால வெளிப்புறத்தில் வேட்டைக்குப் புறப்பட்ட கனடிய ஆடவர், வனப்பகுதியில் உல்லாசமாய்ச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார். அப்போது சற்று தூரத்தில் கரடி ஒன்று வந்ததைக் கண்டார்.

தொந்தரவு செய்யாதபட்சத்தில், அது வந்தவழியே சென்றுவிடும் என்று எதிர்பார்த்தால்...

அவரை நோக்கி ஓடிவந்தது கரடி.

கரடியை அச்சுறுத்தும் வகையில் கத்தியபோதும் பலனில்லை.
தாவி வந்த கரடி ஆடவரைக் கீழே சாய்த்தது. அவர் கையிலிருந்த கேமராவில், அவர் கரடியோடு போடும் சண்டையின் ஒலி மட்டும் பதிவானது.

நல்லவேளை.. இலேசான காயங்களோடு தப்பினார் ரிச்சர்ட் வெஸ்லி ( Richard Wesley).

தப்பித்தோம் பிழைத்தோம் என்ற நிம்மதியில் பெருமூச்சுவிட்ட திரு வெஸ்லி, சம்பவத்தைக் காட்டும் காணொளியைப் பதிவேற்றினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்