Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பயங்கரவாதப் பயிற்சி முகாம்களைத் தாக்கிய எகிப்து ஆகாயப் படை

லிபியாவில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களின் மீது எகிப்திய ஆகாயப் படை ஆறு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
பயங்கரவாதப் பயிற்சி முகாம்களைத் தாக்கிய எகிப்து ஆகாயப் படை

கிறிஸ்துவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளைக் குறிவைத்து எகிப்தியப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். (படம்: AP)

லிபியாவில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களின் மீது எகிப்திய ஆகாயப் படை ஆறு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

மின்யா நகரில் கிறிஸ்துவர்கள் பயணம் செய்த பேருந்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 25 பேர் காயமுற்றனர்.

அதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளைக் குறிவைத்து எகிப்தியப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத முகாம்கள் எங்கிருந்தாலும் அவற்றின் மீது தாக்குதல் நடத்தத் தயங்கப் போவதில்லை என்று எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல் சிஸி கூறினார்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளும் தண்டிக்கப்பட வேண்டியவை என்று சொன்ன அவர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் உதவி கோரியுள்ளார்.

கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எகிப்தில் அண்மை நாட்களில் சிறுபான்மை கிறிஸ்துவர்களைக் குறிவைத்துப் பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்