Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

G7 நாடுகளின் தலைவர்களுக்கு எதிராகப் போராட்டம். வன்முறை வெடிக்குமா?

G7 நாடுகளின் தலைவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. Sicilyயின் Taormina அருகில் உள்ள Giardini Naxos நகரில் இன்று பின்னேரம் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
G7 நாடுகளின் தலைவர்களுக்கு எதிராகப் போராட்டம். வன்முறை வெடிக்குமா?

(படம்: AFP)

G7 நாடுகளின் தலைவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
Sicilyயின் Taormina அருகில் உள்ள Giardini Naxos நகரில் இன்று பின்னேரம் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

அதில் வன்முறை ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கடைகளை மூடிவிடுமாறு Giardini Naxos நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இரவிலிருந்தே கடைகளிலும், உணவகங்களிலும் மதுபானம் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.
பலர் சீக்கிரமாகவே தங்கள் கடைகளை மூடிவிட்டனர்.

2001 ஆம் ஆண்டு இதேபோன்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.
அதில் ஒருவர் மாண்டார்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமானோர் பங்கேற்கக் கூடும் என்று அமைப்பாளர்கள் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்