Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இணையத்தில் பயங்கரவாதக் கருத்துகளை முறியடிக்கக் கூடுதல் முனைப்புத் தேவை - G7 தலைவர்கள் வலியுறுத்தல்

இணையத்தில் பயங்கரவாதக் கருத்துகளை முறியடிப்பதில் வல்லுநர்கள் முனைப்புடன் பங்காற்ற வேண்டும் என்று G7 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இணையத்தில் பயங்கரவாதக் கருத்துகளை முறியடிக்கக் கூடுதல் முனைப்புத் தேவை - G7 தலைவர்கள் வலியுறுத்தல்

இத்தாலிய பிரதமர் பாவ்லோ ஜண்டிலோனியுடன் அதிபர் டோனல்ட் டிரம்ப். (படம்: AFP)

இணையத்தில் பயங்கரவாதக் கருத்துகளை முறியடிப்பதில் வல்லுநர்கள் முனைப்புடன் பங்காற்ற வேண்டும் என்று G7 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இணையச் சேவை வழங்குவோரும், சமூக ஊடங்களை நடத்தும் நிறுவனங்களும் அவர்களின் முயற்சிகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
G7 நாடுகளின் தலைவர்கள் Sicilyயின் Taormina நகரில் கூடியுள்ளனர்.

Google, Apple, Facebook, Amazon போன்ற நிறுவனங்கள் பயங்கரவாதக் கருத்துகளை முறியடிப்பதில் கூடுதல் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பில் தலைவர்களிடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

வட கொரியாவின் தூண்டுதல் நடவடிக்கைகள் குறித்தும் G7 தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். 

அமெரிக்காவும் ஜப்பானும் வட கொரியா மீதான தடைகளை வலுப்படுத்துவதன் தொடர்பில் ஓர் உடன்பாட்டைச் செய்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்