Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தென் கொரியாவில் அமெரிக்காவின் பாதுகாப்புச் சாதனம் - ரஷ்யா, சீனா எதிர்ப்பு

அமெரிக்கா, தென் கொரியாவில் THAAD எனும் ஏவுகணைப் பாதுகாப்புச் சாதனத்தை அமைப்பதற்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

அமெரிக்கா, தென் கொரியாவில் THAAD எனும் ஏவுகணைப் பாதுகாப்புச் சாதனத்தை அமைப்பதற்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லவ்ரோவ்வைச் (Sergei Lavrov) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். கொரிய தீபகற்பம் முழுவதையும் அணுவாயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டுமென இரு நாடுகளும் வலியுறுத்தின.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதையே விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சர் திரு. வாங் யீ கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்