Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பறக்கும் உடை, வானளாவிய கனவுகள்

பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் ரிச்சர்ட் பிரவுனிங், வான்கூவர் துறைமுகத்தில் தரையிலிருந்து உயரே பறந்துள்ளார். 

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் ரிச்சர்ட் பிரவுனிங், வான்கூவர் துறைமுகத்தில் தரையிலிருந்து உயரே பறந்துள்ளார்.

பிரபலக் கேலிச்சித்திரக் கதாபாத்திரம் 'அயர்ன் மேன்'னின் உடையை நினைவுபடுத்தும் ' பறக்கும் உடை' ஒன்றை அணிந்து திரு பிரவுனிங், அந்தச் சாகசத்தைப் புரிந்தார்.

தமது கரங்களிலும் முதுகிலும் இணைக்கப்பட்டுள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தி அவர் வட்டமிட்டுப் பறந்து அந்தரத்தில் சற்று நேரம் நின்றார்.

புகழ்பெற்ற TED  மாநாட்டின் ஓர் அங்கமான அந்நிகழ்வைக் கண்டு பார்வையாளர்கள் பிரமித்தனர். 

அந்தப் பறக்கும் உடைகளைச் சோதனை செய்ததில் பல சவால்களைச் சந்தித்ததாகத் திரு பிரவுனிங் கூறினார்.

பறக்கும்போது திடீரெனத் தரையில்  பலமுறை விழுந்ததாக அவர் சொன்னார். தமது பயணம், முயற்சி செய்வது பற்றியும்  தோல்விகளிலிருந்து  கற்றுக்கொள்வது பற்றியும் இருந்ததாகக் கூறினார் திரு பிரவுனிங்.

பறக்கும் உடையைக் காட்டும் காணொளி, யூடியூப்பில் மூன்று வாரங்களுக்கு முன்னர் பதிவேற்றப்பட்டது.

இதுவரையில் அந்தக் காணொளி ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்