Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

யுனைட்டட் ஏர்லைன்ஸ்: வல்லந்தமாக வெளியேற்றப்பட்ட பயணியுடன் நிறுவனம் சமரசம்

யுனைட்டட் ஏர்லைன்ஸ் தனது விமானத்திலிருந்து வல்லந்தமாக வெளியேற்றப்பட்ட பயணியுடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

யுனைட்டட் ஏர்லைன்ஸ் தனது விமானத்திலிருந்து வல்லந்தமாக வெளியேற்றப்பட்ட பயணியுடன் சமரசம் செய்து கொண்டுள்ளது.

அவருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை.

டேவிட் டாவ் என்ற அந்த ஆடவர் அதிகாரிகளால் தரதரவென்று விமானத்திற்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, விமான நிறுவனம் கடுமையாகக் குறைகூறப்பட்டது.

ஏப்ரல் 9ஆம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது.
விமான நிறுவனத்துடன் திரு டாவ், சுமுகமான முறையில் சமரசத்தை எட்டியுள்ளதாக அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

மருத்துவரான 69 வயது திரு டாவ்வுக்கு சம்பவம் காரணமாக அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது மூக்கும் பற்களும் உடைந்தன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்