Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இருவர் தேவையில்லை, ஒருவரே போதும்

ஜெர்மன் ஏர்லைன்ஸ், விமான அறையில் எல்லா நேரங்களிலும் இரண்டு பேர் இருக்கவேண்டும் என்ற விதிமுறையை அகற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜெர்மன் ஏர்லைன்ஸ், விமான அறையில் எல்லா நேரங்களிலும் இரண்டு பேர் இருக்கவேண்டும் என்ற விதிமுறையை அகற்றியுள்ளது.

2015-ஆம் ஆண்டு, ஜெர்மானிய விமானி ஒருவர், சக ஊழியரை விமான அறைக்கு வெளியேவிட்டு கதவைப் பூட்டி, விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார்.

அதில் 150 பேர் மாண்டனர்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, விமான அறையில் அனைத்து நேரங்களிலும் இருவர் இருக்கவேண்டும் என்ற விதிமுறை செயல்பாட்டுக்கு வந்தது.

எனினும் அதிகமானோரை விமான அறைக்குள் அனுமதிப்பதாலும், அதன் கதவை அடிக்கடி திறந்து அடைப்பதாலும், பயங்கரவாதிகளோ குற்றவாளிகளோ, விமான அறைக்குள் வல்லந்தமாக நுழையும் சாத்தியம் அதிகரிப்பதாக ஜெர்மானிய விமானச் சேவை சங்கம் நடத்திய ஆய்வுகள் புலப்படுத்தின.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்