Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இந்தியாவின் தேசிய நூலகத்துக்கு 300 புத்தகங்கள் அன்பளிப்பு

அதிபர் டானின் இந்திய பயணத்தின் முக்கிய அம்சமாக, திருமதி மேரி டான்(Mary Tan), இந்தியாவின் தேசிய நூலகத்துக்கு 300 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

வாசிப்புநேரம் -

அதிபர் டானின் இந்திய பயணத்தின் முக்கிய அம்சமாக, திருமதி மேரி டான்(Mary Tan), இந்தியாவின் தேசிய நூலகத்துக்கு 300 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 50 ஆண்டுகால உறவை முன்னிட்டு அவை வழங்கப்பட்டன.

அந்த புத்தகங்கள் அனைத்தும் சிங்கப்பூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை அல்லது சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிப்பவை.

இந்த ஆண்டு சிங்கப்பூர் அதன் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதை முன்னிட்டு, தேசிய நூலக வாரியம் உலகெங்கும் உள்ள 40 நூலகங்களுக்கு, மொத்தம் 10 ஆயிரத்து முன்னூறு புத்தகங்களை வழங்கவுள்ளது.

Sg50 புத்தங்களை அன்பளிப்பாக வழங்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக அது இடம் பெற்றுள்ளது.

சிங்கப்பூரின் பல்லின கலாசாரம், வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட தலைப்புகளை ஒட்டிய புத்தகங்கள் அவற்றுள் அடங்கும்.

குடியரசின் தனித்தன்மை வாய்ந்த மரபுடைமை, நகர்ப்புறத் தோற்றம் ஆகியவற்றைப் பற்றி அனைத்துலகரீதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கம்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்