Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காற்றைக் காசு கொடுத்து "வாங்க" வேண்டுமா?

இதமான, வருடும் காற்று வீசினால் என்ன செய்வோம்? கண்ணை மூடிச் சுகமாகச் சுவாசிப்போம். ஆனால் அதற்குக் கொடுப்பினை இல்லாதவர்கள்....

வாசிப்புநேரம் -
காற்றைக் காசு கொடுத்து "வாங்க" வேண்டுமா?

(படம்: AFP)

இதமான காற்று வீசினால் என்ன செய்வோம்? கண்ணை மூடிச் சுகமாகச் சுவாசிப்போம். ஆனால் அதற்குக் கொடுப்பினை இல்லாதவர்கள்....

அதை விலை கொடுத்து வாங்குகிறார்கள். வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை.

நல்ல சுத்தமான காற்றைப் போத்தல்களில் அடைத்து இணையம் வழி விற்பனைக்கு விடுகின்றன நிறுவனங்கள். 

8 லிட்டர் கனடியக் காற்றின் விலை 24 டாலர். அதை 160 முறை சுவாசிக்கமுடியும். 

காற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதையும் அதன் மூலம் வலியுறுத்த விரும்புவதாக அவை சொல்கின்றன. 

ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் பேர் காற்றுத் தூய்மைக் கேட்டுப் பிரச்சினைகளால் மரணமடைகின்றனர். 

சீனாவிலும் இந்தியாவிலும் நிலைமை படுமோசமாக உள்ளது. அந்த இரு நாடுகளில் மட்டுமே, மரண எண்ணிக்கை 3 மில்லியனைத் தாண்டுகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்