Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்ய ஈடுபாடு குறித்த விசாரணையை வழிநடத்த அமெரிக்க சிறப்பு அதிகாரி

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் ஈடுபாடு இருந்ததா என்பதைக் கண்டறியும் விசாரணையை வழிநடத்த, நீதித்துறை, சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ரஷ்ய ஈடுபாடு குறித்த விசாரணையை வழிநடத்த அமெரிக்க சிறப்பு அதிகாரி

மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ரோபர்ட் முல்லெர் (படம்: AFP / BRENDAN SMIALOWSKI)

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் ஈடுபாடு இருந்ததா என்பதைக் கண்டறியும் விசாரணையை வழிநடத்த, நீதித்துறை, சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது.

மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ரோபர்ட் முல்லெர் விசாரணையை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

வெள்ளை மாளிகையைச் சூழ்ந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ரஷ்யாவுடன் டிரம்ப் கூட்டாகச் செயல்பட்டதன் தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அது தொடர்பான விசாரணையைத் தடுக்கும் நோக்கில், திரு கோமியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்