Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிஸ்னியின் வெளிவராத படத்தைத் திருடியிருக்கும் ஊடுருவல்காரர்கள்

டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் பாப் ஐகர், இன்னும் திரையிடப்படாதப் படத்தை, இணைய ஊடுருவல்காரர்கள் திருடி வைத்துள்ளதாகவும் அதற்குப் பெரும் தொகை கேட்பதாகவும் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
டிஸ்னியின் வெளிவராத படத்தைத் திருடியிருக்கும் ஊடுருவல்காரர்கள்

(கோப்புப் படம்: Fred Prouser/Reuters)

டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் பாப் ஐகர், இன்னும் திரையிடப்படாதப் படத்தை, இணைய ஊடுருவல்காரர்கள் திருடி வைத்துள்ளதாகவும் அதற்குப் பெரும் தொகை கேட்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் அந்தப் படத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.

ஹாலிவுட் செய்தியாளர் ஒருவர் ஊடுவல்காரர்களின் கோரிக்கைக்கு
டிஸ்னி நிறுவனம் அடிபணியாது என்று கூறியுள்ளார். 

டிஸ்னி நிறுவனம், மத்திய முகவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதாகவும் இணையத்தில் ஏற்படும் தகவல் கசிவைக் கண்காணிப்பதாகவும் அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

பிணைப் பணம் கிடைக்கும்வரை படத்தை ஐந்து நிமிடத்திற்கும், அதன் பின் 20 நிமிடத்திற்கும் வெளியிடவிருப்பதாக இணையத் திருடர்கள் டிஸ்னி நிறுவனத்தை மிரட்டி வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்