Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எகிப்தில் 3,500 ஆண்டுப் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு

நைல் லக்சர் நகரில், ஒரு பொற்கொல்லரின் 3,500 ஆண்டுப்  பழைமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
எகிப்தில் 3,500 ஆண்டுப் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு

(படம் : Reuters)

எகிப்தில் புதிய தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நைல் லக்சர் நகரில், ஒரு பொற்கொல்லரின் 3,500 ஆண்டுப்
பழைமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் தொல்பொருள் அமைச்சு அண்மைத் தகவலை வெளியிட்டது.

தலைநகர் கைரோவுக்குத் தெற்கே 700 கிலோமீட்டர் தொலைவில், நைல் நதியின் மேற்குக் கரையில் அந்தக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்துப் பொற்கொல்லரின் கல்லறையான அதில், ஒரு பெண் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரின் மம்மிகள் கிடைத்துள்ளன.

அந்த மூன்று மம்மிகளுக்கும் பொற்கொல்லருக்கும் தொடர்புள்ளதா என்பது தெரியவில்லை.

தொல்பொருள் ஆய்வாளர்களின் ஊகப்படி, பெண்ணுக்கு 50 வயதாக இருக்கும்போது அவர் மாண்டுபோயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

(படம் : Reuters)

அவரது இரண்டு மகன்களில் ஒருவர் 20 வயதுக்குப் பின்னரும் மற்றவர் 30 வயதுக்குப் பின்னரும் மாண்டு போயிருக்கலாம்.

இருவரின் மம்மிகளும் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பொற்கொல்லர் தமது மனைவியோடு சேர்ந்து அமர்ந்திருப்பது போன்ற ஒரு சிலை உள்ளிட்ட பல பொருட்கள் கல்லறையில் காணப்பட்டன.

சவப் பெட்டிகள், ஈமச் சடங்கின்போது பயன்படுத்தப்படும் சீப்பு, முகமூடிகள், சில நகைகள் ஆகியவை அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

(படம் : Reuters)

கண்டுபிடிப்பு முழுமையாக முடிவுறவில்லை என்பதால் மேலும் சில அரும்பொருட்களும் புதிய தகவல்களும் தெரியவரக்கூடும்.

புதிய கண்டுபிடிப்பு, எகிப்தில் பயணத் துறையைப் பெரிதும் ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்