Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

எகிப்தில் துப்பாக்கிச்சூடு - குறைந்தது 23 பேர் பலி

எகிப்தின் மின்யா நகரில் காப்டிக் கிறிஸ்துவர்கள் உள்ளிருந்த பேருந்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமுற்றனர்.

வாசிப்புநேரம் -
எகிப்தில் துப்பாக்கிச்சூடு - குறைந்தது 23 பேர் பலி

(படம் :AFP)

எகிப்தின் மின்யா நகரில் காப்டிக் கிறிஸ்துவர்கள் உள்ளிருந்த பேருந்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமுற்றனர்.

பெனி சுயெஃப் மாநிலத்திலிருந்து அன்பா சாமுவெல் மடத்திற்கு அந்தக் காப்டிக் கிறிஸ்துவர்கள் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தாக்குதலில் மாண்டோரின் எண்ணிகையை மாநில ஆளுநர் உறுதி செய்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று காப்டிக் கிறிஸ்துவர்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் புதிய அசம்பாவிதம் நடந்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர். 118 பேர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்