Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

900,000 வாகனங்களை மீட்டுக் கொள்ளும் Honda நிறுவனம்

இரண்டாம் வரிசை இருக்கையில் எழும் கோளாறு காரணமாகச் சுமார் 900,000 ஓடிசி (Odyssey) வாகனங்களை மீட்டுக்கொள்கிறது ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான Honda Motor. 

வாசிப்புநேரம் -
900,000 வாகனங்களை மீட்டுக் கொள்ளும் Honda நிறுவனம்

படம்: Honda Odyssey/Facebook

வாஷிங்டன்: இரண்டாம் வரிசை இருக்கையில் எழும் கோளாறு காரணமாகச் சுமார் 900,000 ஓடிசி (Odyssey) வாகனங்களை மீட்டுக்கொள்கிறது ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான Honda Motor.

இருக்கைகள் முறையாகத் தாழிடப்படவில்லையென்றால், அவை முன்னால் சாயும் அபாயம் நிலவக்கூடும்.   அதன் காரணமாக அந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருக்கை கோளாறு காரணமாகச் சிலருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாக 46 புகார்களைப் பெற்றுள்ளது அந்நிறுவனம்.

வாடிக்கையாளர்கள் அந்த மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையின் பேரில் தங்களுடைய வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளத்தை நாடலாம்: www.recalls.honda.com.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்