Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவுடன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த அமெரிக்கா விருப்பம்

இந்தியாவுடனான அணு உலை ஒப்பந்தத்தைச் செயல்படுத்தப்படுத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவுடன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த அமெரிக்கா விருப்பம்

(படம்: REUTERS/Valery Sharifulin)

அணு உலை ஒன்றின் தொடர்பில் இந்தியாவோடு உடன்பாடு செய்துகொள்ள அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்டிங்ஹவுஸ் எனும் அணுமின்சார நிறுவனத்தோடு அந்த உடன்பாட்டைச் செய்துகொள்வது திட்டம்.

அதற்கான பணிகள் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் அணு உலையில் ஏதேனும் விபத்து நேர்ந்தால், அதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என்பதன் தொடர்பில் அது முட்டுப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாளை மறுநாள் அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகையின் அண்மைக் கருத்து வெளியாகியுள்ளது.

தமது பயணத்தின்போது திரு. மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அப்போது, அணு உலை உடன்பாடு மட்டுமின்றி இன்னும் சில உடன்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படவுள்ளது.

22 ஆளில்லாக் கண்காணிப்பு விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அப்போது அமெரிக்கா அனுமதியளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2 பில்லியன் டாலர் மதிப்புள்ளது அந்த உடன்பாடு.  



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்