Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக அழகி போட்டியில் வாகை சூடிய இந்திய மருத்துவ மாணவி

உலக அழகியாக இந்திய மருத்துவ மாணவி, மானுஷி சில்லார் (Manushi Chhillar) வாகை சூடியுள்ளார். அவரின் வெற்றி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

வாசிப்புநேரம் -
உலக அழகி போட்டியில் வாகை சூடிய இந்திய மருத்துவ மாணவி

படம்: AFP/Nicolas Asfouri

சீனா: உலக அழகியாக இந்திய மருத்துவ மாணவி, மானுஷி சில்லார் (Manushi Chhillar) வாகை சூடியுள்ளார். அவரின் வெற்றி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

அந்த வெற்றியை அடுத்து, உலக அழகிப் போட்டியில் ஆக அதிக வெற்றிகளைக் குவித்த நாடுகளில் இந்தியாவும் வெனிசுவேலாவும் முன்னிலை வகிக்கின்றன. இதுவரை, அவ்விரு நாட்டையும் சேர்ந்த தத்தம் ஆறு அழகிகள் உலக அழகிப் போட்டியில் வாகை சூடியுள்ளனர்.

அதன்படி, உலக அழகிப் போட்டியில் வெற்றி பெறும் ஆறாவது இந்தியர் மானுஷி சில்லார் (Manushi Chhillar). அதற்கு முன்னர் பிரியங்கா சோப்பிரா, ஐஸ்வர்யா ராய் முதலானோர் உலக அழகி போட்டியில் மணி மகுடம் சூடினர்.

வெற்றி பெற்ற மருத்துவ மாணவிக்கு வயது வெறும் 20 தான். அவர் முறைப்படி பாரம்பரிய நடனத்தைப் பயின்றுள்ளார். அவருக்கு ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் உண்டு. 

சீனச் சொகுசு விடுதியில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்றது அந்த உலக அழகி போட்டி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்