Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரான்-ஈராக் இராணுவ ஒத்துழைப்பில் முன்னேற்றம். அமெரிக்கா கவலை?

ஈரான்-ஈராக் இருதரப்பு உறவு முன்னேற்றம். அமெரிக்கா கவலை?

வாசிப்புநேரம் -
ஈரான்-ஈராக் இராணுவ ஒத்துழைப்பில் முன்னேற்றம். அமெரிக்கா கவலை?

(ஈராக்கிய ராணுவத்தின் பீரங்கி, REUTERS/Muhammad Hamed)

ஈரானும் ஈராக்கும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அதேவேளை பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடவும் வகைசெய்யும் உடன்படிக்கையைச் செய்துகொண்டுள்ளன.

இருநாட்டைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்கள்  புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பிற்கும் தளவாடங்கள் உள்ளிட்ட  பயிற்சிகளுக்கும் அந்த இணக்கக் குறிப்பு வகை செய்கிறது.

2003-ஆம் ஆண்டு ஈராக்கிய அதிபர் சதாம் ஹூசைன் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, வைரிகளாக இருந்து வந்த ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்படத்தொடங்கியது. 

பெர்ஷிய வளைகுடா நாடுகளான அவை செய்துகொண்டிருக்கும் உடன்படிக்கை அமெரிக்காவுக்குக் கவலையளிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

திரு.டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்