Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவை எச்சரித்த ஈரானிய அதிபர்

அமெரிக்காவை எச்சரித்த ஈரானிய அதிபர்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவை எச்சரித்த ஈரானிய அதிபர்

(படம்: Reuters)

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு, ஈரானிய அதிபர் ஹசான் ரொஹானி உடனடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா கைவிட்டால், உலக நாடுகள் அமெரிக்கா மீது கொண்டுள்ள நம்பிக்கை குறையும் என திரு ரௌஹானி எச்சரித்தார்.

7-நாடுகள் சம்பந்தப்பட்ட அந்த ஒப்பந்தத்தைக் கைவிட தமது நிர்வாகம் தயாராக உள்ளதாய், திரு டிரம்ப் கோடிகாட்டினார்.

அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டால், ஈரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என்றார் திரு ரௌஹானி.

எரிசக்தி தயாரிப்புக்காகவே அணுசக்தி நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோனும், அந்த விவகாரம் பற்றி கருத்துரைத்தார்.

அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்கினால், அது கடுமையான பாதகத்தை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.
அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல்-போனால், அது பொறுப்புணர்வற்றதாக இருக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபையில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்