Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூசிலந்துப் பிரதமரின் பெயரைச் சரியாக உச்சரிக்க நினைத்த ஆஸ்திரேலிய நிருபருக்குக் காத்திருந்த ஆச்சரியம்

ஒருவரின் பெயரைச் சரியாக உச்சரிப்பதுதான் நாம் அவர்களுக்குக் காட்டும் சிறந்த மரியாதை.

வாசிப்புநேரம் -
நியூசிலந்துப் பிரதமரின் பெயரைச் சரியாக உச்சரிக்க நினைத்த ஆஸ்திரேலிய நிருபருக்குக் காத்திருந்த ஆச்சரியம்

((படம்: REUTERS/Ross Setford/File Photo))

ஒருவரின் பெயரைச் சரியாக உச்சரிப்பதுதான் நாம் அவர்களுக்குக் காட்டும் சிறந்த மரியாதை.

ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழக வானொலி நிருபர் டைகர் வெப்-இன் கருத்தும் அதுதான்.

நியூசிலந்தின் புதிய பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன்(Jacinda Ardern)இன் குடும்பப் பெயரை உச்சரிப்பதில் டைகருக்குக் குழப்பம்.

சிலர் ஆர்டர்ன் என்றும், வேறு சிலர் ஆஹ்டர்ன் என்றும் உச்சரித்தனர்.

சரியான உச்சரிப்பை யாரிடம் கேட்பது என்று யோசித்த டைகர், இறுதியில் நியூசிலந்து நாடாளுமன்றத்துக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

அங்கிருக்கும் அதிகாரிகளைக் கேட்பதே சிறந்த வழி என்பது டைகரின் எண்ணம்.

எதிர்பாராவிதமாக அவரது அழைப்பு, புதிய பிரதமருக்கே மாற்றிவிடப்பட்டது.

திரு. டைகரிடம் தாமே தமது பெயரின் சரியான உச்சரிப்பை விளக்கினார் நியூசிலந்துப் பிரதமர்.

ஜசிந்தா ஆர்டர்ன் என்பதே சரியான உச்சரிப்பு என்று அறிந்துகொண்ட நிருபருக்கோ, செய்வதைத் திருந்தச் செய்யத் தாம் கொண்ட எண்ணத்துக்கு வண்ணம் சேர்ந்ததில் உற்சாகம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்