Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'ஜஸ்டின் பெய்பரின் நடவடிக்கைகள் சரியில்லை'-தடை விதித்திருக்கும் சீனா

'ஜஸ்டின் பெய்பரின் நடவடிக்கைகள் சரியில்லை'-தடை விதித்திருக்கும் சீனா

வாசிப்புநேரம் -
'ஜஸ்டின் பெய்பரின் நடவடிக்கைகள் சரியில்லை'-தடை விதித்திருக்கும் சீனா

(படம்: Rueters)

பிரபல கனடியப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் சீனாவில் இசை நிகழ்ச்சி நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது "தீய நடவடிக்கைகள்" அதற்குக் காரணம் என்று சீனா தெரிவித்துள்ளது.

நாட்டின் பொழுதுபோக்குத் துறை இத்தகையோரால் மாசுபடும் என்று பெய்ச்சிங் நகராட்சியின் கலாசாரப் பிரிவு சொன்னது.

அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால், தடை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அது தெரிவித்தது.

23 வயதுப் பாடகரும், பாடலாசிரியருமான பெய்பர் குடித்துவிட்டு வாகனமோட்டியது, பந்தயம் வைத்து வாகனத்தைச் செலுத்தியது போன்ற சட்டவிரோத காரியங்களில் சிக்கியிருக்கிறார்.

செப்டம்பர் மாதம் ஆசியப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளைப் படைக்கத் திட்டமிட்டிருக்கிறார், பெய்பர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்