Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரியா அணுவாயுதத் திட்டம் - பேச்சுக்குத் தயாராகிவருகிறது ஜெர்மனி

வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த அரசதந்திர முயற்சியில் ஈடுபடத் தயார் என்று ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா  மேர்கல்  கூறியுள்ளார்

வாசிப்புநேரம் -
வடகொரியா அணுவாயுதத் திட்டம் - பேச்சுக்குத் தயாராகிவருகிறது ஜெர்மனி

(படம்: AFP / John Macdougall)

வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த அரசதந்திர முயற்சியில் ஈடுபடத் தயார் என்று ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா  மேர்கல் கூறியுள்ளார்.

உள்ளூர் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் அதனைத் தெரிவித்தார்.

ஈரான் அணுவாயுதப் பேச்சுகளை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

ஈரான் தொடர்பான பேச்சுகளில் ஜெர்மனியும் இடம்பெற்றிருந்தது.

அந்தப் பேச்சுகளின் விளைவாக ஈரான் மீதான பெரும்பாலான தடைகள் நீக்கப்பட்டன. அதற்கு ஈடாக ஈரான் அதன் அணுசக்தித் திட்டங்களைக் கைவிட்டது.

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்துக்கு அரசதந்திரத் தீர்வு மட்டுமே சரியான வழி என்று தாம் கருதுவதாக ஜெர்மானியப் பிரதமர் குறிப்பிட்டார்.

அதன் தொடர்பில், சீன அதிபர் ஸி ஜின்பிங், ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோருடன் ஏற்கனவே அவர் பேசியதாகக் கூறப்பட்டது.

நாளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் வடகொரியா குறித்துத் திருவாட்டி மெர்கெல் பேசுவார் என்று நாளேடு தெரிவித்தது. ///

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்