Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்ஸிகோவை உலுக்கிய நிலநடுக்கம்-138 பேர் மரணம்

மெக்ஸிகோவை உலுக்கிய நிலநடுக்கம்-138 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
மெக்ஸிகோவை உலுக்கிய நிலநடுக்கம்-138 பேர் மரணம்

(படம்: AFP)

மெக்சிக்கோவை உலுக்கிய கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது 138 பேர் மாண்டனர்.
நிலநடுக்கம், ரிக்ட்டர் அளவில் ஏழு புள்ளி ஒன்றாகப் பதிவானது.

நாட்டின் மத்திய பகுதியை அது உலுக்கியது.
பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன.
கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
மெக்ஸிகோ நகரில் குறைந்தது 27 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனோ நிட்டோ கூறினார்.


1985-ஆம் ஆண்டு மெக்ஸிகோ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்.
அதனை நினைவுகூரும் வகையில் அந்தப் பாவனைப் பயிற்சி அமைந்திருந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, மெக்ஸிகோவை மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது.
அதில் குறைந்தது 98 பேர் மாண்டனர்.
அந்தச் சம்பவத்தில்-இருந்து அந்நாட்டு மக்கள் மீண்டுவரும் வேளையில், அண்மை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்