Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்ஸிகோ நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

மெக்ஸிகோ நகரில் நடத்தப்பட்ட இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஐவர் கொல்லப்பட்டனர். 12க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

வாசிப்புநேரம் -
மெக்ஸிகோ நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

(படம்: Reuters)

மெக்ஸிகோ நகரில் நடத்தப்பட்ட இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஐவர் கொல்லப்பட்டனர். 12க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இரு துப்பாக்கிக்காரர்கள், கேளிக்கைக் கூடமொன்றில் மூவரைச் சுட்டுக்கொன்றதாக அந்நகர தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் தெரிவித்தது. மாண்டோரில் இருவர்ஆண்கள். ஒருவர் பெண்.

இதற்கிடையே, மெக்ஸிகோ நகரின் இஸ்தாபலாபா என்ற இடத்தில், சந்தை ஒன்றில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சம்பவத்துக்கான காரணம் ஆராயப்பட்டுவருகிறது.

சென்ற வாரம், மெக்ஸிகோ நகரில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 8 பேரை மெக்ஸிகோ கடற்படை வீரர்கள் பட்டப்பகலில் சுட்டுக்கொன்றனர்.

மெக்ஸிகோவில் அதிகரித்துவரும் குண்டர் கும்பல் சம்பவங்கள், அதிபர் என்ரிக் பெனோ நிட்டோவுக்குப் பெரும் தலைவலியாக இருந்துவருகிறது.

2012ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அவர், மெக்ஸிகோவில் வன்முறைச் சம்பவங்களை பெருமளவு குறைக்கப்போவதாக உறுதி தெரிவித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்