Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸிம்பாப்வே அதிபர் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் - மக்கள் ஆரவாரம்

திரு ராபர்ட் முகாபேயை நீக்குவதாக ZANU-PF கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தோர் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

வாசிப்புநேரம் -
ஸிம்பாப்வே அதிபர் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் - மக்கள் ஆரவாரம்

(படம்:REUTERS/Philimon Bulawayo)

ஸிம்பாப்வேயின் அதிபர் ராபர்ட் முகாபேயை ஆளும் ZANU-PF கட்சி, தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது.

முன்னாள் துணையதிபர் எமர்ஸன் மினங்குவாவைத் தலைவராய் நியமிப்பதாக அது சற்றுமுன்னர் அறிவித்தது.

திரு ராபர்ட் முகாபேயை நீக்குவதாக ZANU-PF கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தோர் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கடந்த சில வாரங்களாகத் திரு முகாபே பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கட்சியின் முடிவு, இன்னமும் அதிபர் பதவியில் இருக்கும் 93 வயது திரு முகாபேக்கு மேலும் நெருக்குதலை அளிக்கும் என நம்பப்படுகிறது.

அடுத்த அதிபராகத் தமது மனைவியை நியமிக்க வேண்டும் என்ற ஆசைக்கு முட்டுக்கட்டையாக ராணுவ நடவடிக்கைகள் அமைந்தன. 

அவரது மனைவி கிரேசும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்