'வடகொரியாவை அழிக்கவேண்டிவரலாம்'-டிரம்ப்
வடகொரியா அதன் தூண்டுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அழிவைச் சந்திக்கவேண்டி வரலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.
வடகொரியா அதன் தூண்டுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அழிவைச் சந்திக்கவேண்டி வரலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் திரு டிரம்ப் தமது முதல் உரையை ஆற்றினார்.
அமெரிக்காவையோ அதன் நட்பு நாடுகளையோ அச்சுறுத்தும் விதத்தில் வடகொரியா நடந்துகொள்வது அதற்கு நல்லதல்ல என்றார் அவர்.
அமெரிக்காவின் ராணுவ பலத்தைப் பற்றிப் பெருமிதமாகப் பேசினார் திரு டிரம்ப்.
அமெரிக்காவிடம் அபரிமிதமான பலமும், பொறுமையும் இருக்கிறது என்றார் அவர்.