Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பொறித்த பூச்சி: திகட்டத் திகட்டத் தின்று தங்கம் வென்றார்

பெண்களுக்குத் தங்கம் என்றால் எப்போதும் ஒரு மோகம் தான். இருந்தாலும் தங்கக் கட்டியைப் பரிசாகப் பெற ஒரு பெண் எதற்கும் துணிந்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பொறித்த பூச்சி: திகட்டத் திகட்டத் தின்று தங்கம் வென்றார்

(படம்: Reuters)

பெண்களுக்குத் தங்கம் என்றால் எப்போதும் ஒரு மோகம் தான். இருந்தாலும் தங்கக் கட்டியைப் பரிசாகப் பெற ஒரு பெண் எதற்கும் துணிந்திருக்கிறார்.

தங்கக் கட்டி வெல்ல அவர் செய்தது....சுமார் ஒன்றேகால் கிலோ பொறித்த பூச்சிகளைச் சாப்பிட்டிருக்கிறார்....அதுவும் 5 நிமிடங்களுக்குள்.

அவ்வகைப் பொறித்த பூச்சிகள் சீனாவின் யூனான் மாநிலத்தில் மிகவும் பிரபலம். அதில் ஒன்றிரண்டை மக்கள் சுவைத்து உண்பதுண்டு.

ஆக அதிக பொறித்த பூச்சிகளை குறைவான நேரத்துக்குள் உண்பவருக்குப் பரிசு என்று அறிவித்திருந்தது அமைப்பு ஒன்று.

அதில் வெற்றிபெற்ற இந்தப் பெண், வெளியூர்க்காரர்.

பூச்சிகளை அள்ளி அள்ளிச் சுவைத்த இவரைப் பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்துபோயினர் உள்ளூர்வாசிகள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்