Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தேவலாயத்தில் "போக்கிமோன்" விளையாடியவருக்குச் சிறை?

தேவாலயத்தில் "போக்கி மோன்" விளையாடினால் என்ன கிடைக்கும்? மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

வாசிப்புநேரம் -
தேவலாயத்தில் "போக்கிமோன்" விளையாடியவருக்குச் சிறை?

(படம்: Reuters)

தேவாலயத்தில் "போக்கி மோன்" விளையாடினால் என்ன கிடைக்கும்?

மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

தேவாலயத்தில் "போக்கி மோன்" விளையாடியவருக்கு அந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று ரஷ்ய அரசாங்க வழக்குரைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட். 22 வயது ருஸ்லான் சொக்லோவ்ஸ்கி தேவாலாயத்தில் வைத்து "போக்கி மோன்" விளையாடிய காணொளியைத் தமது வலைப்பூவில் வெளியிட்டார்.

அக்டோபரில் அவர் கைது செய்யப்பட்டார். சமய வெறுப்பைத் தூண்டியதாகவும், சமய நம்பிக்கையாளர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாகவும் ருஸ்லான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ருஸ்லானைத் தண்டிக்காமல் விடுவதற்குச் சட்டத்தில் இடமேயில்லை என்று அரசாங்க வழக்குரைஞர்கள் கூறினர்.

விசாரணையின் போது நீதிமன்றத்தில் இருந்த ருஸ்லானின் தாயார் கண்ணீர் விட்டார்.

ஆனால், போக்கிமோன் விளையாண்டது என்ன வன்முறைச் செயலா ? அதற்கு ஏனிந்தத் தண்டனை என்று கேள்வி கேட்கிறார் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது மகன்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்