Images
  • princess
    (படம்:AP)

ஜப்பானிய இளவரசிக்குத் திருமணம்

ஜப்பானிய இளவரசி மாக்கோவுக்கும், பட்டதாரி மாணவர் கேய் கொமூரோவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படவிருப்பதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

25 வயதாகும் இருவரும் 5 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டுப் படிப்பு பற்றிய நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனர்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கொமூரோ, சரியான நேரம் வரும்போது கூடுதல் விவரங்களை வெளியிடுவதாகக் கூறினார்.

ஜப்பானில் உள்ள அனைத்துலகக் கிறிஸ்துவப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் இளவரசி மாக்கோவும் கொமூரோவும் சக வகுப்பு மாணவர்களாக இருந்தனர்.

ஜப்பானிய அரச குடும்ப விவகாரங்களைக் கையாளும் அமைப்பு, அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளது.  

உங்கள் கருத்து

Top