Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸ்டார்பக்ஸ் காப்பியால் சூடுபட்டவருக்கு 100,000 டாலர்

ஸ்டார்பக்ஸ் கொதிக்கும் காப்பியால் சூடுபட்டவருக்கு 100,000 டாலர்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில், ஸ்டார்பக்ஸ் கடைக்கு காப்பி வாங்கச் சென்றார் ஒரு பெண். ஊழியர் ஒருவரிடமிருந்து காப்பியைப் பெற்று, காரின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்தவருக்குக் கொடுத்திருக்கிறார்.

கொதித்துக்கொண்டிருந்த காப்பிக் கோப்பையின் மூடி பட்டென்று திறந்துகொண்டது. காப்பி கையில் கொட்ட, அந்தப் பெண்ணுக்கு மோசமாகக் காயம் ஏற்பட்டது. 

அதை அவர் அப்படியே விட்டுவிடவில்லை. வழக்குப் போட்டார்.

காப்பி கொதிநிலையில் இருக்கும்போது அதன் மூடி திறந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நிறுவனம் கோப்பையில் குறிப்பிட்டிருக்கவேண்டும் என்று அந்தப் பெண்ணின் வழக்குரைஞர்கள் வாதிட்டனர். 

வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டார்பக்ஸ் நிறுவனம், இழப்பீட்டுத் தொகையாக 85,000 டாலரும், மருத்துவச் செலவுகளுக்கு 15,000 டாலரும் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்