Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சென்ற ஆண்டு தீவிரவாதத் தாக்குதல்களால் மாண்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது

பயங்கரவாதத் தாக்குதல்களால் சென்ற ஆண்டு முழுமைக்கும்,  25,673 பேர் மாண்டனர். 

வாசிப்புநேரம் -
சென்ற ஆண்டு தீவிரவாதத் தாக்குதல்களால் மாண்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது

(படம்: Reuters / Romeo Ranoco)

அனைத்துலக அளவில், தீவிரவாதத் தாக்குதல்களால் மாண்டோரின் எண்ணிக்கை, தொடந்து இரண்டாவது ஆண்டாகச் சென்ற ஆண்டு குறைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட பொருளாதார, அமைதி நிலையம் வெளியிட்ட GTI எனப்படும் உலகளாவிய தீவிரவாதக் குறியீட்டு அறிக்கை அதனைத் தெரிவித்தது. 

பயங்கரவாதத் தாக்குதல்களால் சென்ற ஆண்டு முழுமைக்கும்,
25,673 பேர் மாண்டனர். 

பயங்கரவாதத்தின் பாதிப்பு உச்சத்தில் இருந்த 2014ஆம் ஆண்டு நிலவரத்தோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 22 விழுக்காடு குறைவு.

பயங்கரவாதத்தால் ஆகக் குறைவாகப் பாதிக்கப்பட்ட வட்டாரங்களின் பட்டியலில், ஆசிய-பசிஃபிக் மூன்றாம் நிலையில் இருந்தது.

பிலிப்பீன்சுக்கு அதில் 12-ஆவது இடம்.

சிங்கப்பூர், மங்கோலியா, வட-கொரியா, பாப்புவா நியூகினி, தீமோர் லெஸ்டே, வியட்நாம் ஆகியவை, கடந்த 5 ஆண்டில் பயங்கரவாதம் தொடர்பான எந்தச் சம்பவத்தையும் எதிர்கொள்ளவில்லை.

2002ஆம் ஆண்டிலிருந்து பிலிப்பீன்ஸ், சீனா, தாய்லந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆக அதிகமான மரணங்களைச் சந்தித்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

அந்த வட்டாரத்தில் நேர்ந்த பயங்கரவாதம் தொடர்பான மரணங்களில் 85 விழுக்காட்டு மரணங்கள் அந்த மூன்று நாடுகளில் நேர்ந்தவை.

சிரியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், பயங்கரவாதத் தாக்குதலால் நேர்ந்த மரணங்கள் சென்ற ஆண்டு கணிசமாகக் குறைந்தன.

பயங்கரவாத எதிர்ப்பைப் பொறுத்தவரை ஆக அதிக முன்னேற்றம் கண்ட நாடு நைஜீரியா.

போக்கோ ஹராம் பயங்கரவாதக் குழுவின் தாக்குதலால் அங்கு மாண்டு போவாரின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 80 விழுக்காடு குறைந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்