Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க-இந்திய உறவு "இவ்வளவு வலுவாக இருந்ததில்லை"-டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க-இந்திய உறவு "இவ்வளவு வலுவாக இருந்ததில்லை"-டிரம்ப்

(படம்: AP)

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இவ்வளவு வலுவாக இதுவரை இருந்ததில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவர்  வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார்.

இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதன்முறை.

தற்காப்பு, அனைத்துலகப் பாதுகாப்பு ஆகியவற்றில் அணுக்கமான ஒத்துழைப்பை அவர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநுழைவு, பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய விவகாரங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் மாறுபட்ட கருத்து கொண்டுள்ளன.

இருப்பினும், இருநாட்டு அரசதந்திர உறவும், வர்த்தகமும் சிறப்பான எதிர்காலம் கொண்டிருக்கும் என்று திரு. மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

திரு. மோடி தமது உண்மையான நண்பர் என்று அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பதிவில் வருணித்திருந்தார்.

இந்தியா, அமெரிக்காவுக்கு இடையில் தற்காப்பு ஒத்துழைப்பு மேம்பட்டு அமெரிக்காவிடமிருந்து ஆளில்லா வேவு விமானங்களை இந்தியா வாங்குவதன் தொடர்பில் 2 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள ஓர் ஒப்பந்தம் கைகூடும் என்று கூறப்படுகிறது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்