Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருப்போருக்குப் புதிய தடைகளை விதித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
வடகொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா தடை

(படம்: Reuters)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருப்போருக்குப் புதிய தடைகளை விதித்திருக்கிறார்.

அதற்கான செயலாக்க ஆணையில் தாம் கையெழுத்திட்டிருப்பதாக அவர் கூறினார்.

தனிநபர்கள், நிறுவனங்கள் என இருதரப்புக்கு அது பொருந்தும்.

வடகொரியாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தும்படி சீனா அதன் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதைத் திரு. டிரம்ப் சுட்டினார்.

வடகொரியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகத் திகழும் சீனாவின் அத்தகைய நடவடிக்கையை அமெரிக்க அதிபர் பாராட்டினார்.

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் ,வடகொரியா மீது தடைவிதித்த அமெரிக்க அதிபரைப் பாராட்டினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்